en parangkal thangkituvar

என் பாரங்கள் தாங்கிடுவார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் பாரங்கள் தாங்கிடுவார்
நாதா நீரல்லால் யாருமில்லை – 2
என் ஜீவியம் உம் கையிலே (2)
உம்பாண்டமாய் என்னை மாற்றீடுமே
நாதா நீரல்லால் யாருமில்லை
1.காலமும் கடந்திடுதே
ஜீவியம் முடிவினை நெருங்கிடுதே – 2
நாதா உம்மையை பின் செல்லவே (2)
கிருபை வரம் தாருமே
நாதா நீரல்லால் யாருமில்லை – என்
2.சோர்ந்திடும் வேளையிலே
சார்ந்து நான் உந்தனில் நின்றிடவே – 2
நாதா உந்தனின் பெலனைத் தந்து (2)
தினம்தோறும் காத்திடுமே
நாதா நீரல்லால் யாருமில்லை – என்