En Sathurakkalukku

என் சத்துருக்களுக்கு
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

En Sathurakkalukku – என் சத்துருக்களுக்கு
என் சத்துருக்களுக்கு முன்பாக
ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி – 2
என் தலையை எண்ணையினால்
அவர் அபிஷேகம் செய்கின்றார் – 2 – என் சத்துரு
1.நான் மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன் – 2
உன்னதமானவர் மறைவில்
நித்தமும் தங்கி வாழ்வேன் – 2 – என் சத்துரு
2.நிந்தனை நெருக்கங்கள் சூழ்ந்தாலும்
கஷ்டங்கள் மனதில் வந்தாலும் – 2
உலக மகிமையை மறப்பேன்
உன்னத வாழ்வை நாடுவேன் – 2 – என் சத்துரு
3.ஆராய்ந்துமுடிய அதிசயங்கள்
என் வாழ்வில் நித்தம் செய்திடுவார் – 2
இரட்டிப்பான நன்மையை தந்திடுவார்
இன்றைக்கே தந்து உயர்த்திடுவார் – 2 – என் சத்துரு