en thalai uyaranum

என் தலை உயரனும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் தலை உயரனும்
எதிரிக்கு மேலாக
என் பந்தி பெருகணும்
எதிர்ப்பவர் முன்பாக. – 2
எனக்கு விரோதமாய் ஆயிரங்கள் எழுந்தாலும்
என் பட்சம் அணுகவிடமாட்டார் – 2
என் தேவன் எனக்காய் யுத்தங்கள் செய்து
வெற்றியை தந்திடுவாரே. – 2
பகைவர் முன்பாக பந்தி ஒன்றை
ஆயத்தம் செய்கின்றார் – 2
என் தலையை எண்ணையால்
அபிசேகமும் செய்கின்றீர்
பாத்திரம் நிரம்பி வழியுதே. – 2
சிங்கத்தின் கெபியிலும் அக்கினி சூளையிலும்
சூழ்ச்சி செய்து தூக்கி எறிந்தாலும். – 2
தானியேலின் தேவன் தாபரமாய் நின்று
தாங்கி என்னை விடுவிப்பாரே – 2
ஆமானைப்போல திட்டங்கள் போட்டு – என்னை
தீவிரமாய் அழிக்க நினைத்தாலும் – 2
மொர்தேகாயின் தேவன் என்னோடு இருப்பதால்
வெற்றிமேல் வெற்றி கொள்ளுவேன் – 2