en thayin vayirril ennai azhaiththeer

என் தாயின் வயிற்றில்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் தாயின் வயிற்றில் என்னை அழைத்தீர்
என் தகப்பனிலும் என்னை நேசித்தீர் (2)
தொல்லை கஷ்டங்கள் என்னில் வந்தாலும்
உம் தோளில் என்னை சுமந்தீரய்யா (2)
எந்தன் கிருபையே எந்தன் பரிகாரியே
உம் கிருபையால், என் பாவம் வெண்பஞ்சானதே
எந்தன் அன்பே எந்தன் ஆருயிரே
உம் அன்பினால் என் வாழ்க்கை மறுரூபமானதே -2
1.என் துணை மறந்தும் என்னை மறவீர்
என் தோழன் விலகினும் என்னோடிருப்பீர் (2)
மனம் தளர்ந்து நான் சோர்ந்தாலும்
உம் மார்பில் என்னை சாய்த்தீரையா (2) – எந்தன் கிருபையே
2.என் கனவு சிதைந்தும் என்னை நம்பினீர்
என் பெலன் ஓய்ந்தும் என்னை காப்பீர் (2)
வாழ்வே கசந்து போய் இருந்தாலும்
உம் சிலுவை நிழலே தஞ்சமையா (2) – எந்தன் கிருபையே
என் தாயின் வயிற்றில் பாடல் வரிகள், EnThaayin Vayitril lyrics