en uyarntha ataikkalame, nan nampum ketakame – 2

என் உயர்ந்த அடைக்கலமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் உயர்ந்த அடைக்கலமே, நான் நம்பும் கேடகமே – 2
ஆ..பத்தில் அனுகூலமே, கைவிடாத கன்மலையே – 2
கிருபை கிருபை கிருபை பெரியதே
கிருபை கிருபை கிருபை சிறந்ததே
உங்க கிருபை கிருபை கிருபை பெரியதே
கிருபை கிருபை கிருபை சிறந்ததே
முகாந்திரம் இல்லாமல், ஒன்றுமே நீர் செய்வதில்லை.
சொன்னதை செய்வதில், உமக்கு நிகர் யாரும் இல்லை .- 2
அற்பமான ஆரம்பம், அற்புதமாய் மாறிடுமே
அடைக்கப்பட்ட வாசல்கள், இன்றைக்கே திறந்திடுமே -2
தீங்கு என்னை அணுக விடமாட்டீர்
தீங்கு என்னை நெருங்க விடமாட்டீர் – கிருபை
தேவைகளின் மத்தியிலும், காத்திருப்பேன் பொறுத்திருப்பேன்
உம் மகிமை விளங்கும்வரை , பாதத்திலே நிலைத்திருப்பேன் – 2
துன்பமான நேரங்கள், இன்பமாக மாறிடுமே
இடிந்துபோன உம் வாழ்க்கை, அலங்கமாய் எழும்பிடுமே – 2 தீங்கு
என் உயர்ந்த அடைக்கலமே பாடல் வரிகள், En Uyarntha Adaikkalamae Lyrics