En Vaalvin Maattrathirkku kaaranar song lyrics

என் வாழ்வின் மாற்றத்திற்கு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் வாழ்வின் மாற்றத்திற்கு காரணர் அவரே
என் வாழ்வின் மேன்மைக்கு இயேசு ஒருவரே -2
நீயும் அவரை நம்புவாயானால்
உன் வாழ்வை செழிப்பாக மாற்றுவார்
மாற்றுவார் (2) உன் வாழ்வை மாற்றுவார்
மாறிடும்(2) செழிப்பாக மாறிடும் -2
பிரயோஜனமற்ற ஒநேசிமுவை பிரயோஜனமாக்கினாரே ஆகாதென்று தள்ளப்பட்டஅனைவரையும் மூலைக்கல்லாக்கிடுவார் -2
ஆடுகளை மேய்த்த தாவீதையும் அரசனாய் மாற்றினாரே ஆரம்பம் அற்பமாய் இருந்தாலும் முடிவு சம்பூரணமே
மாராவின் கசந்த தண்ணீரையும். மதுரமாய் மாற்றினாரே முடியாதென்று உலகம் நினைக்கையிலே. முடித்து காட்டிடுவார்
இல்லை இல்லை ஒரு போதும் சொல்லிடாதே உள்ளதை முதலில் கொடு ஐந்தப்பம் இரண்டு மீன்களையும் கூடைகளாய் மாற்றிடுவார்
Song
உன் வாழ்வை மாற்றுவார்