en valkaiyellam

என் வாழ்க்கையெல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் வாழ்க்கையெல்லாம்
உம் பிரசன்னத்திலே
எந்நாளும் நடந்திட வேண்டும் (2)
உந்தன் பிரசன்னம் எத்தனை இன்பம்
உந்தன் சமூகம் எத்தனை இன்பம்
1. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர் - எந்நாளும்
எதற்காகவும் இழந்திட மாட்டேன் -2
2. உலகம் என்னை திருப்திபடுத்த
முடியாதையா - எந்தன் ஊற்று
உம்மிடத்தில் உள்ளதே ஐயா
3. இரவும் பகலும் உமது சமுகம்
விழுந்து கிடக்கணும் - இடைவிடாமல்
உம்மோடு என் தொடர்பு இருக்கணும்
4. சிறையினிலே யோசேப்போடு
இருந்த தெய்வமே - சிறுமையிலும்
வறுமையிலும் எங்கள் மகிமையே