en vazhkkaiyoo ingke – En Vaalkkaiyo engae

என் வாழ்க்கையோ இங்கே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

என் வாழ்க்கையோ இங்கே – En Vaalkkaiyo engae
என் வாழ்க்கையோ இங்கே இங்கே
என் தெய்வமோ அங்கே அங்கே
இறைவன் என்னில் வருகின்றார்
இதயக் கதவைத் தட்டுகின்றார்
உம்மில் மகிழ உறவில் நெகிழ
1.மனித உருவில் பிறந்தவரே
என் இதயக் குடிலைக் காண்பவரே
மனிதம் மலர வந்தவரே
என் இனிய வாழ்வை ஏற்பவரே
என்னையே இழந்தேன் இதயத்தை திறந்தேன்
உம்மையே ஏற்க வருகின்றேன்
வாரும் வாரும் இன்பமே
என் வாழ்வில் என்றும் தங்குமே
2.அப்பத்தின் வடிவில் உள்ளவரே
என் ஆன்ம வாழ்வைக் காண்பவரே
அருளின் வடிவில் வந்தவரே
என் ஆசீர் முழுவதும் அறிபவரே
என்னையே இழந்தேன் இதயத்தை திறந்தேன்
உம்மையே ஏற்க வருகின்றேன்
வாரும் வாரும் இன்பமே
என் வாழ்வில் என்றும் தங்குமே