en vinnappaththirku sevikotum en thevane

விண்ணப்பத்திற்கு செவிகொடும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் விண்ணப்பத்திற்கு செவிகொடும் என் தேவனே
என் சிறுமையை நீர் நினைத்தருளும் இராஜனே -2
1.சிறுமையும் எளிமையும் ஆனவளான என்
சிறுமையை நினைத்தருளும்
கரங்களை கூப்பி வேண்டுகிறேன்
என் கரங்களை திடப்படுத்தும்
கரமதை உயர்திய தாரகரே
நின் தாழ்களை பனிகின்றேன்
என் கர்த்தரின் வீட்டினில்
உருதியாய் நின்றிட
கால்களை ஸ்திரப்படுத்தும் – என் விண்ணப்பத்திற்கு
2.ஆனவரை நான் அழது விட்டேன்
என் அழுகைக்கு பதில் வேண்டும்
அழுதிட கண்களில் கண்ணீர் இல்லை
உம் குருதியை தரவேண்டும்
வேகமாய் வந்து வேண்டதல் கேட்டு
வேதனை நீக்கிவிடும்
என்னை ஆற்றிட தேற்றிட
அன்பரின் கரங்களில்
அதிகமாய் அர்பனித்தேன் – என் விண்ணப்பத்திற்கு
3.தேவனே எனது சந்தானத்தில்
உம் ஆவியல்லாம் ஊற்றும்
தேவரீர் தந்த சந்ததி மேல்
உம் ஆசீர்வாதம் ஊற்றும்
நீதியின் கிரீடங்கள்
நினைவினில் சூட்டி
நிஜங்களை உணர்த்திவிடும்
என் நேசரின் கரங்களில்
அலங்கார கிரீடமாய்
அடிமையை வனைந்து கொள்ளும் – என் விண்ணப்பத்திற்கு