En Virupam

என் விருப்பம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

En Virupam – என் விருப்பம்
என் விருப்பம் இல்லப்பா
உங்க விருப்பம் தானப்பா-2
நிற்பதும் நடப்பதும்
உங்க கிருபை தானப்பா-2
1.தூரத்திலே இருந்த என்னை
சமீபமாய் கொண்டு வந்தீர்-2
வெட்கப்பட்ட இடத்திலே உயர்த்தி நடத்தினீர்-2- என் விருப்பம்
2.உமது இரக்கத்திற்கு முடிவே இல்லப்பா-2
உயிருள்ள நாளெல்லாம் உம்மையே பின்தொடர்வேன்-2- என் விருப்பம்
3.உடைந்த பாத்திரமாய் இருந்த என்னையும்-2
கணம் பெற்ற பாத்திரமாய் என்ணி மாற்றினீர் 2- என் விருப்பம்