1. en yavaiyum tharukinrene

என் யாவையும் தருகின்றேனே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

1. என் யாவையும் தருகின்றேனே
ஒன்றையும் என்னிடம் வைத்திடேன்
அழைப்புக்குக் கீழ்படிந்து
மனதார அர்ப்பணித்தேன்
பேசும் பேசும் ஜெபம் செய்யும்போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்
2. பிடிவாதத்தோடிருந்தேனே
என் வழிகளில் நடந்தேனே
உம் ஆவலை நிறைவேற்றி
உம்மில் நாட்களை கழிப்பேன்
3.சந்தேகத்தால் இருளடைந்தேன்
வெட்கம் பயம் வெறுத்திடுவேன்
சுகமாகு என்று சொல்வீர்
துாய இதயம் சிருஷ்டியும்
4. உண்மையான ஓர் இதயம்
உம் பார்வையில் பழுதற்றதாய்
தந்து அன்பினால் நிரப்பும்
யுத்தம் செய்யும் வாழ்க்கை தாரும்