enakkaka mariththeere – Enakaga marithearea

எனக்காக மரித்தீரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

எனக்காக மரித்தீரே – Enakaga marithearea
எனக்காக மரித்தீரே என்னை மீட்க
உந்தன் அன்பு மா பெரிது
விலையில்லா ரத்தம் எனக்காக சிந்திய (2)
விந்தை கிறிஸ்து நீர்தானே.
விந்தை கிறிஸ்து நீர்தானே .
1.உலகில் பாவம் பெருகினதால்
பரிதபித்தாரே என் இயேசுவே
ஒருவரும் கெட்டுப் போக மனமில்லாமல்
தன்னையே கொடுத்திட்ட தேவப் புதல்வா
2 . மா கொடுமை என்று தெரிந்திருந்தும்
மானிடனாய் நீர் அவதரித்தீர்
மண்ணுலகை மீட்க விண்ணுலகை விட்டு
வீதியில் எனக்காய் அடிகள் பட்டீர்
எனக்காக மரித்தீரே என்னை மீட்க
உந்தன் அன்பு மாபெரிது
விலையில்லா ரத்தம் எனக்காக சிந்திய 2
விந்தை கிறிஸ்து நீர் தானே(2)