enakkenru oru sonthame – Enakendru Oru Sonthame

எனக்கென்று ஒரு சொந்தமே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

எனக்கென்று ஒரு சொந்தமே – Enakendru Oru Sonthame
எனக்கென்று ஒரு சொந்தமே
அது உனையன்றி எனக்கில்லையே
என்றென்றும் நான் வாழுவேன்
உன்னில் எந்நாளும் நான் வாழுவேன்
என் சொந்தம் நீயானதால்
எனக்கென்றும் பேரின்பமே
மலரா என் இதயத்தை மலர வைத்தாய்
மடியா உன் உயிரோடு இணைய வைத்தாய்
அறிந்தேன் நான் புரிந்தேன் உன் பேரன்பையே
மடிப்பேன் நான் இழப்பேன் என் வாழ்வையே
சோகங்கள் சோதனைகள் எனைத் தொடர்ந்தாலும்
உன் உறவொன்று என்றென்றும் எனைத் தேற்றுமே
வாழ்ந்தாலும் மடிந்தாலும் இனி என்றுமே
உன் அன்பை ஒருநாளும் மறவேனய்யா