enakkoru aasaiyuntu – Enakkoru Aasai undu

எனக்கொரு ஆசையுண்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனக்கொரு ஆசையுண்டு – Enakkoru Aasai undu
எனக்கொரு ஆசையுண்டு
என் இயேசுவை காண வேண்டும்
எனக்கொரு ஆவல் உண்டு
நான் அவரோடு பேச வேண்டும்
வையகமே வானகமே
எனது ஆசை நிறைவேறுமா (2)
1. மலையும் காடும் சோலையும்
அலைந்தோடும் கடலும் தேடினேன்
காணேன் அவரை கதறி அழுதேன்
கர்த்தரே வாரும் வாரும் என்றேன்
2. கரம் ஒன்று என்னைத் தொட்டது
என் கண்ணீரை மெதுவாய் துடைத்தது
வேதம் தந்தேன் தினமும் அதிலே
என்னை பார் என மொழிந்தது
3. தினமும் வேதத்தில் காண்கிறேன்
தேவாதி தேவனை துதிக்கின்றேன்
ஜெபத்தில் பேசி மகிழுகின்றேன்
ஜீவ தேவனை வாழ்த்துகிறேன்