Enakkoru Nesar Undu

எனக்கொரு நேசர் உண்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனக்கொரு நேசர் உண்டு அவர் தான் இயேசு ராஜா
எனக்கொரு புகலிடமுண்டு அவர் தான் இயேசு ராஜா
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அன்பு நிறைந்தவர்..
1. என் வேதனைகளை அவர் பார்க்கிறார்
என் கண்ணீரையும் அவர் காண்கிறார்
ஏற்ற நேரத்தில் பதிலை தருகிறார்
2. அவர் செட்டையின் நிழலில் ஆறுதலே
அவர் செட்டையின் மறைவில் ஆரோக்யமே
ஏற்ற நேரத்தில் சுகத்தை தருகிறார்
3. அவர் இடது கை என் தலையின் கீழிருக்கும்
அவர் வலது கரத்தினால்
என்னை அணைத்துக் கொள்கிறார்
ஏற்ற நேரத்தில் ஆறுதல் செய்கிறார்
4. என் அலைச்சல்களை அவர் பார்க்கிறார்
என் கண்ணீரை கணக்கிலே
வைத்துக் கொள்கிறார்
ஏற்ற நேரத்தில் உதவி செய்கிறார்