enaku um kirubai podhume

எனக்கு உம் கிருபை போதுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனக்கு உம் கிருபை போதுமே – நேசரே
எனக்கு உம் கிருபை போதுமே
கவலைகள் நிறைந்த துன்ப உலகிலே
எனக்கு உம் கிருபை போதுமே
துணையில்லா ஒரு மாடப்புறா போல்
தவிக்கும் என்னை சேர்த்திட வாரும்
நாதனின் வருகை தாமதமானால்
விழாமல் காத்திடுமே -என்னை – 2
சிங்கத்தின் குகையில் தள்ளினாலும்
அக்கினியில் என்னை இழுத்தெறிந்தாலும்
உள்ளம் கலங்கும் நேரங்கள் எல்லாம்
விழாமல் காத்திடுமே-என்னை-2
சிகிச்சைக்கு ஒரு வைத்தியனும் இல்லை
ஆறுதல் அடைய இடமும் இல்லை
உமது வழியும் கிருபை வசனமும்
மண்ணில் என் ஆறுதலே-இந்த -2