Endhan Nesar Yesu Nadha

எந்தன் நேசர் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன்
உம்மில் வைக்கும் ஆசையாலே பாவம் யாவும் வெறுப்பேன்
என்னை அன்பால் தேடி வந்து ரத்தம் சிந்தி ரட்சித்தீர்
நேசர் மா பெரும் கிருபையை நான் ஓர்போதும் மறவேன்
எந்தன் நேசர் இயேசு நாதா
உம்மில் அன்பு கூறுவேன்
நேசர் மா பெரும் கிருபையை
நான் ஓர்போதும் மறவேன்
மாயலோக வாழ்வில் மூழ்கி பித்தனாக திரிந்தேன்
தீய ஆசையால் மயங்கி சிந்தை கேட்டு அலைந்தேன்
சற்று தேவ பயமின்றி துஷ்டனாய் நாட்களிதான்
நீரோ அன்பாய் என்னைச் சேர்த்து உந்தன் சொந்தமாக்கினீர்
எண்ணம் இல்லா எந்தன் வாழ்க்கை அனைத்தையும் மன்னிப்பீர்
பரிசுத்த ஆவி தந்து சத்ய பாதை காட்டினீர்
மேலும் நேர் வழி நடக்க நீர் என் முன்னே செல்கிறீர்
சா மட்டும் நிலைத்து நிற்க உம் கிருபையை ஈகிறீர்
இனி நான் என் வாழ் நாளெல்லாம் உம்மையே பின் செல்லுவேன்
நன்றியுள்ள சாட்சியாக உம் அன்பை பிரஸ்தாபிப்பேன்
சா மட்டும் உந்தன் துதி எங்கள் வாயில் இருக்கும்
என்னிலும் உம்மோடு வாழ்ந்து நித்யானந்தம் கொள்ளுமே