endrum aarathipom

என்றும் ஆராதிப்போம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தரின் கிருபைகளை என்றும் பாடிடுவேன் நான்
உமது உண்மையை தலைமுறையாய் என்றும் அறிவிப்பேன் நான்
என்றும் ஆராதிப்போம் எங்கள் கேடகம் நீரே
என்றும் ஆராதிப்போம் நாமம் மகத்துவமே
என்றும் ஆராதிப்போம் கேடகம் நீரே
என்றும் ஆராதிப்போம் நாமம் மகத்துவமே
உமக்கு நிகராக யாரும் இல்லை
ஒப்பாக எவரும் இல்லை
வானங்கள் உம் அதிசயங்களை பாடும்
பரிசுத்தவான்களின் சபையிலே உண்மை விளங்கும்
உம் அபிஷேகம் நிலை நிற்கும்
உம் புயம் என்னை பெலப்படுத்தும்
எங்கள் பெலனும் மகிமையும் நீரே
உந்தன் தயவினால் என்றும் நாங்கள் உயர்வோம்