Engal Immanuelae Ennodu Irukintreer Lyrics

எங்கள் இம்மானுவேலே என்னோடு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எங்கள் இம்மானுவேலே என்னோடு இருக்கின்றீர்-4
விட்டு விலகுவதில்லை
கை விடுவதில்லை
ஒரு நொடி பொழுதும்
என்னை என்றும் மறப்பதில்லை
என் தாயின் கர்பத்தில்
என்னை காப்பாற்றினீர்
நான் நடந்தாலும் படுத்தாலும்
சூழ்ந்தந்திருக்கின்றீர்
உம் கை என்னை பிடிக்கும்
உம் வலது கரம் என்னை நடத்தும்
எங்கள் இம்மானுவேலே….
நான் வானத்திற்கு ஏறினாலும்
நீர் அங்கே இருக்கின்றீர்
பாதலத்தில் என் படுக்கை போட்டாலும்
நீர் அங்கே இருக்கின்றீர்
உம் கை என்னை பிடிக்கும்
உம் வலது கரம் என்னை நடத்தும்
எங்கள் இம்மானுவேலே