Enge Ooduvaai Yesuvin

எங்கே ஓடுவாய் எங்கே ஓடுவாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எங்கே ஓடுவாய் எங்கே ஓடுவாய் – Enge Ooduvaai Yesuvin
எங்கே ஓடுவாய் எங்கே ஓடுவாய்
இயேசுவின் அன்பை மறந்து
எங்கே ஓடுவாய்
பாவ மன்னிப்பால் பரலோகமே
பாவத்தின் பலன் நரகம் தானே
இயேசுவே உன் இரட்சிப்பு
அவரால் உன் மன்னிப்பு
எண்ணிப்பார் எண்ணிப்பார்
உன் வாழ்நாளை எண்ணிப்பார்
1. பாவ இன்பத்தை பால் போல் பருகி
தேவ் கோபத்தை தேடி ஓடுறாய்
அருமையான ஆத்தும மீட்பு
அதையறியாமல் அலைந்தோடுறாய்
2. உந்தன் பணத்தை நம்பி ஓடாதே
சிறு துரும்பும் கூட வராதே
உன் வாலிபத்தின் பாவங்கள் தானே
உன்னுடன் மரித்த பின்பு உயிர்த்திடுமே
3. மரண தூதன் அருகிலிருக்கிறான்
நரகத்தை விரிவாய் திறந்திருக்கிறான்
கிருபையை நீ கருத்தில் எண்ணி
குருசை நோக்கி கொல்கத்தாவாண்டை வா
4. விருதாவாகப் பொருள் சேர்க்கிறாய்
வேகமாகவே திரிந்தலைகிறாய்
ஆஸ்தி சேர்க்கிறாய் அழிவைக் காண்கிறாய்
அடுத்தவனுக்கு அதை விட்டுப் போகிறாய்
5. உன் இருதயம் மேட்டிமை கொண்டு
உன் அகந்தையால் அழிந்து போகிறாய்
உலக இன்பம் ஒரு நிமிஷமே
உன்னத இன்பம் நித்திய காலமே