engkal nesare pava nasare

எங்கள் நேசரே பாவ நாசரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எங்கள் நேசரே பாவ நாசரே
என்னை பாருமே
எந்தன் நிலைமை மாறுமே
இரவும் பகலும் உந்தன் சாயல் பெறவே
எந்தன் சிந்தையை ஆட்கொள்ளுமே
பெலனே ஒன்றும் இல்லை
பரனே உந்தன் பலனாம் ஆவியைத்தாருமே
நன்மை செய்ய விரும்பும் நெஞ்சம் என்னில் இருந்தும்
தீமை செய்து முடிக்கும் தன்மை என்னில் இருந்திடுதே
நிர்பந்தமான மனுஷன் நான் நித்தம் செய்தேன் கெடுதலை – 2
ஏதும் அறியா மூடன் நான் எவரால் அடைவேன் விடுதலை -2
இரவும் பகலும் உந்தன் சாயல் பெறவே
எந்தன் சிந்தையை ஆட்கொள்ளுமே
பெலனே ஒன்றும் இல்லை
பரனே உந்தன் பலமாம் ஆவியைத்தாருமே
இயேசுவே உம்மில் இருந்து என்றும் ஆவியில் நடந்திடனும்
உந்தன் ஜீவ ஆவியால் உடனே விடுதலை அடைந்திடனும்
நித்தம் உந்தன் பெலத்தினால் எதையும் நான் செய்திடனும் -2
என்னில் வாழும் உம்மால் என்றும் உலகத்தை ஜெயித்திடனும் – 2
இரவும் பகலும் உந்தன் சாயல் பெறவே
எந்தன் சிந்தையை ஆட்கொள்ளுமே
பெலனே ஒன்றும் இல்லை
பரனே உந்தன் பலமாம் ஆவியைத்தாருமே