Enna Azhagu Un Arul Azhagu Lyrics

என்ன அழகு உன் அருள் அழகு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

என்ன அழகு உன் அருள் அழகு
என்ன அழகு உன் அன்பழகு (2)
ஏவனின் நீர்ச்சுமையே… தாவீதின் கோபுரமே…
சாரோனின் மலரழகே… சீயோனின் அருள் மகளே (என்ன அழகு – அம்மா
1. கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மென்மையும்
வார்த்தையின் உண்மையும் கொள்ளைக்கொண்டதே
என்னை கொள்ளைக்கொண்டதே… (2)
ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே – 2
அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க – 2 (என்ன அழகு – அம்மா
2. அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும்
விதையாய் என் நெஞ்சினில்
விளைந்திடுமே கணிந்திடுமே (2)
வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே – 2
அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… – 2 (என்ன அழகு – அம்மா