enna nan seyya ventum sollungkappa -2

என்ன நான் செய்ய

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்ன நான் செய்ய வேண்டும் சொல்லுங்கப்பா -2
நான் கீழ்ப்படிவேன் இன்றே செயல்படுவேன் -2
இனி வாழ்ந்து காட்டுவேன் என்னை நம்புங்கப்பா -2
என்ன நம்புங்கப்பா எங்களை நம்புங்கப்பா-2
இனி வாழ்ந்து காட்டுவேன் என்னை நம்புங்கப்பா -2
அப்பா அப்பா அப்பா இயேசப்பா
முட்செடியில் பக்தன் மோசேக்கு தரிசனம் தரவில்லையா?
கண்மலையில் தீர்க்கன் எலியாவுக்கு வல்லமை தரவில்லையா? -2
களஞ்சியத்தில் வந்த கிதியோனுக்கு வார்த்தையும் தரவில்லையா? காத்திருக்கும் அடியாருக்கு பதில் ஒன்றுமே இல்லையா -2
பள்ளத்தாக்கில் வீரன் யோசுவாவுக்கு சூரியன் நிற்கவில்லையா?
கூலாங்கலினால் சின்ன தாவீதுக்கு கோலியாத் விழவில்லையா? -2
செங்கடலிலும் ஜனம் இஸ்ரவேலுக்கு பாதை திறக்கவில்லையா?
காத்திருக்கும் உம் பக்த்தருக்கு பதில் ஒன்றுமே இல்லையா? -2