enna tharuven umakku, iyesu theyvame

என்ன தருவேன் உமக்கு இயேசு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

என்ன தருவேன் உமக்கு, இயேசு தெய்வமே,
என்ன தருவேன் உமக்கு, இயேசு தெய்வமே,
என்னைத்தருவேன் உமக்கு, இயேசு தெய்வமே,
பொன்னும் பொருளெல்லாம் கேட்பதில்லையே
நொறுங்கிய நெஞ்சம் இறைவன் கேட்பது..2.என்னதருவேன்
நிலத்தின் விளையும் மனித உழைப்பும்,
சேர்ந்து கிடைத்திட்ட,
அப்பரசத்தில் என்னையும் சேர்த்து தருகின்றேன் .2
எந்தன் தேவையை அறிந்த தெய்வமே
உந்தன் பாதத்தில் வாழ்வைத் தருகின்றேன்..2 என்னதருவேன்
உள்ளம் என்னும் ஆலயம், வாழும் தெய்வமே,
உடலும் பொருளும் ஆவியும்
உவந்து அளிக்கின்றேன்-2
பாவி என்னையும் தேர்ந்த தெய்வமே
பணிந்து தருகின்றேன் ஏற்றுக்கொள்ளுமே..2. என்னதருவேன்
என்ன தருவேன் உமக்கு இயேசு பாடல் வரிகள், Enna Tharuven Umakku yesu lyrics