ennai enrum nataththum – Ennai Entrum Nadaththum

என்னை என்றும் நடத்தும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை என்றும் நடத்தும் – Ennai Entrum Nadaththum
என்னை என்றும் நடத்தும்
எபினேசர் உம்மை போல்
வேறே யாரும் என்னக்கில்லையே
கருத்தாய் விசாரித்து கனிவோடு நடத்தும்
உம்மை போல யாரும் இல்லையே
என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்லையே
தகப்பனை போல் சுமந்து வந்தீர்
ஒரு தாயை போல என்னை தேற்றினீர்
யாரும் இல்லா சூழ்நிலை ஒருபோதும் வராமலே
கரம்பிடித்து நடத்தி வந்தீர்
(என் இயேசுவே)
உம்மை போல யாரும் இல்லையே
தளர்ந்த போது என்னை தேடி வந்தீர்
உம் வார்த்தை தந்து என்னை தேற்றினீர்
காத்திருக்கும் காலத்தில் பெலன் தந்து தாங்கினீர்
ஏற்ற வேளை என்னை காண்பித்தீர்
(என் இயேசுவே)
உம்மை போல யாரும் இல்லையே