ennai marrineer aiya – Ennai maattineer aiya

என்னை மாற்றினீர் ஐயா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை மாற்றினீர் ஐயா – Ennai maattineer aiya
என்னை மாற்றினீர் ஐயா நிலை நாட்டினீர் ஐயா
என்னை மாற்றினீர் ஐயா நிலை நாட்டினீர் ஐயா
உங்க கிருபையால நானும் வாழ்கிறேன் ஐயா
உங்க இரக்கத்தால நானும் நிற்கிறேன் ஐயா
உங்க கிருபையால நானும் வாழ்கிறேன் ஐயா
உங்க இரக்கத்தால நானும் நிற்கிறேன் ஐயா
அக்கினி சூழும் போது என்னோடு இருப்பவரே
தண்ணீரில் மூழ்கும் போது தூக்கி எடுப்பவரே
அக்கினி சூழும் போது என்னோடு இருப்பவரே
தண்ணீரில் மூழ்கும் போது தூக்கி எடுப்பவரே
எனக்காய் சிலுவையிலே தொங்கின என் இயேசுவே
என் பாவம் போக்க வந்த தேவா ஆட்டுக்குட்டியே
எனக்காய் சிலுவையிலே தொங்கின என் இயேசுவே
என் பாவம் போக்க வந்த தேவா ஆட்டுக்குட்டியே
உம் நாமம் சொல்லும் போது பேய்கள் ஓடுது
உம் நாமம் சொல்லும்போது நோய்கள் நீங்குது
உம் நாமம் சொல்லும்போது பேய்கள் ஓடுது
உம் நாமம் சொல்லும்போது நோய்கள் நீங்குது
உம் நாமம் சொல்லி நான் கதறுகின்ற வேளையிலே
எனக்காய் ஓடி வந்து யுத்தங்களை செய்பவரே
உம் நாமம் சொல்லி நான் கதறுகின்ற வேளையிலே
எனக்காய் ஓடி வந்து யுத்தங்களை செய்பவரே
எண்ணில்லா நன்மைகளை என் வாழ்வில் செய்பவரே
கண்மணி போல என்னை பாதுகாப்பவரே
எண்ணில்லா நன்மைகளை என் வாழ்வில் செய்பவரே
கண்மணி போல என்னை பாதுகாப்பவரே
தாய் போல தேற்றுகிறீர் தந்தை போல சுமக்கின்றீர்
உம்மைப் போல அன்பை நான் இதுவரை கண்டதில்லை
தாய் போல தேற்றுகிறீர் தந்தை போல சுமக்கின்றீர்
உம்மைப் போல அன்பை நான் இதுவரை கண்டதில்லை