Ennai Nesikum Nalla Thagappan song lyrics

என்னை நேசிக்கும் நல்ல தகப்பனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை நேசிக்கும் நல்ல தகப்பன் நீங்கதான்
என்னை பத்திரமாக பாதுகாப்பீர்
என்னை விசாரிக்கும் நல்ல தகப்பன் நீங்கதான்
என்னை அக்கரையோடு பார்த்து கொள்ளபவரே
எந்தன் உயர்ந்த அடைக்கலமே
என்னை காக்கும் தெய்வமே இயேசுவே -2
உம் உயிரைக் கொடுத்து உயிரைத் தந்து
என்னை மீட்ட தெய்வமே
உம் அன்பாய் பொழிந்து பெலனை தந்து
நன்றாய் நடப்பவர்-2
எந்தன் கேடகமானவரே
என்னை காக்கும் தெய்வமே இயேசுவே -2
நல்ல தகப்பனக என்னை கரம்பிடித்தீங்க
என் மேல உசுர வைச்சீங்க
நல்ல தாயாக என்னை தேற்றுனீங்க
என் மேல பாசத்தை வைச்சீங்க
என் நேசமே என் சுவாசமே
உம்மை வர்ணிக்க வார்த்தை இல்லை
உம்மை போல யாருமில்லை-2
எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வமே இயேசுவே -2
நல்ல நண்பனாக என்னை தேடி வந்தவரே
என்னை விட்டு விலக மாட்டிங்க
நல்ல மேய்ப்பனாக என்ன வழி நடத்துவீர்
என்னை அனுதினமும் போஷிப்பவர் நீங்க
என் தஞ்சமே என் புகலிடமே
உம்மை துதிக்க வார்த்தையில்லை
உம்மைப் போல யாரும் இல்லை – 2
எந்தன் நங்கூரமானவரே
என்னை காக்கும் தெய்வமே இயேசுவே – 2