Ennai vazhinadathum

என்னை வழிநடத்தும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Ennai vazhinadathum – என்னை வழிநடத்தும்
கர்த்தாவே உம்மிடத்தில்
என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்
தேவனே உம்மை நம்புகிறேன்
நான் வெட்கப்படாத படி
உம்மை நோக்கி பார்க்கிறேன்
உம்மை நோக்கி பார்க்கிறேன்
உம்மை நோக்கி பார்க்கிறேன்
உண்மையுள்ளவர் என்று
உம்மை நோக்கி பார்க்கிறேன் (கர்த்தாவே)
உம்முடைய வழிகளையும் உம்முடைய பாதைகளையும்
நீர் எனக்கு காண்பியும் தினம் எனக்கு காண்பியும் (2)
சத்தியத்திலே நான் நடந்திட
சாட்சியுள்ள வாழ்க்கையை நான் வாழ்ந்திட (2)
இரட்சிப்பின் தேவனே என்னை
வழி நடத்திடும் (2)
ஆராதனை ஆராதனை என் இயேசுவுக்கே ஆராதனை
ஆராதனை ஆராதனை என் தகப்பனுக்கே ஆராதனை
என்னுடைய பாவங்களையும்
என்னுடைய மீறுதலையும் நீர் மன்னித்தருளும்
நீர் நினையாதீரும் (2)
உம்முடைய தயவினால் என்னை நடத்திடுங்க
உம்முடைய கிருபையால் என்னை நினைத்திடுங்க (2)
உத்தம தேவனே என்னை வழி நடத்திடும் (2)
(ஆராதனை)