1.ennaith theva sayalana

என்னைத் தேவ சாயலான

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.என்னைத் தேவ சாயலான
சிஷ்டியாக்கி, பின்பு நான்
கெட்டபோதென் மீட்பரான
கர்த்தரே; நீர் நேசவான்;
என்னை என்றும்,
உம்மில் நிற்கச் செய்திடும்.
2.மானிடர்க்கு மெய்மையையும்
மார்க்கத்தையும் நித்திய
ஜீவனையும், மோட்சத்தையும்
ஈந்த மீட்பராகிய
நீரே என்றும்
என்னில் தங்கி ரட்சியும்.
3.எனக்காகப் பாடுபட்டு
நிந்தையுள்ளதாகிய
சாவால் பரமண்டலத்து
பாக்கியத்தைத் தேடின
யேசு ஸ்வாமி,
என்னைக் காத்து ரட்சியும்.