enni mutiya kirupaikatkay

எண்ணி முடியா கிருபைகட்காய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எண்ணி முடியா கிருபைகட்காய்
நன்றி செலுத்தியே பாடிடுவேன் – 2
துணை செய்து தூக்கிவிட்டீர்
துயரங்கள் அனைத்தையும் மாற்றிவிட்டீர்
உடனிருந்தீர் உதவிசெய்தீர்
உடைந்திட்ட வேளையில் உருவாக்கினார்
யாவையும் நன்றாய் செய்பவரே
யெசுவா உம்மையே உயர்த்திடுவேன் – 2 – எண்ணி முடியா
ஜீவனை தந்ததும் அல்லாமல்
தயவை ஈந்தீர் அளவில்லாமல்
எப்பக்கம் சத்துருவால் நெருக்கப்பட்டும்
எல்லாமே எதிராக நின்ற போதும்
கடிண கதவுகளை திறந்தவரே
சாட்சியாக என்னை மாற்றினீரே – 2 – எண்ணி முடியா
நிற்க பெலனில்லா நிலைகளிலும்
அமிழ்த்தும் பலவித உளையினின்று
கடல் மேல் என்னை நீர் நடக்க வைத்தும்
அச்சத்தால் அமிழ்ந்து போகையிலும்
நீங்கலாக்கியே மீட்டவரே
காலூன்றி நிற்க செய்தவரே – 2 – எண்ணி முடியா