ennilla nanmaikal enakku seythittare

என்னில்லா நன்மைகள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னில்லா நன்மைகள் எனக்கு செய்திட்டாரே
என் இயேசு எந்நாளும் ஏந்தி சுமந்தாரே-2
நல்லவர் இயேசு என் துணையானாரே
நன்றி சொல்லிட வார்த்தையில்லை -2 என்னில்லா
தாய் தந்தை வஞ்சனை செய்திடலாம்
பெற்ற பிள்ளை எல்லாம் உதரிடலாம் -2
அரவணைத்தாரே தாங்கினாரே
பட்சயமாய் பாசத்தோடே -2 – என்னில்லா
பணக்கஷ்டம் மணக்கஷ்டம் வந்திடலாம்
குடும்பத்தில் குழப்பங்கள் சூழ்ந்திடலாம் -2
கரம் பிடித்தாரே காத்திட்டாரே
கருணை வடிவாய் கனிவுடனே -2 என்னில்லா
சொந்தம் பந்தம் எல்லாம் விலகிடலாம்
சோர்வுகளால் மனம் உடைந்திடலாம் -2
ஆதரித்தாரே நடத்தினாரே
மனதுருக்கமாய் காருண்யத்தோடே -2- என்னில்லா