ennillatha nanmaigal

எண்ணில்லா நன்மைகள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எண்ணில்லா நன்மைகள் எந்தன் வாழ்வில் செய்பவர்
எந்தன் துணையுமானவர்
தாயை போல தேற்றியே தம் தோளில் சுமப்பவர்
எந்தன் தந்தையுமானவர்
என் தாயும் நீரே
என் தந்தை நீரே
எனதெல்லாம் நீரே
என் வாழ்வே இயேசய்யா
என் வாழ்வே நீர்தானய்யா
தம் செட்டைகளினால் என்னை மூடிக்கொள்பவர்
எந்தன் அடைக்கலமானவர்
அக்கினி ஸ்தம்பமாய் என் முன் செல்பவர்
எந்தன் அரணுமானவர்
என் அரண் நீரே
என் அடைக்கலமே
எனக்கெல்லாம் நீரே
என் வாழ்வே இயேசய்யா
என் வாழ்வே நீர்தானய்யா
எனக்காய் மரித்தவர் மூன்றாம் நாள் எழுந்தவர்
எந்தன் இரட்சிப்புமானவர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
எந்தன் பெலனுமானவர்
என் பெலன் நீரே
என் ஏக்கம் நீரே
எனதுயிர் நீரே
என் வாழ்வே இயேசய்யா
என் வாழ்வே நீர்தானய்யா
நெருக்கத்தின் காலங்களில் என் கூட இருப்பவர்
எந்தன் தஞ்சமுமானவர்;
ஆபத்துநாளிலே கூப்பிடுதல் கேட்பவர்
எந்தன் நம்பிக்கையானவர்
என் தஞ்சம் நீரே
நம்பிக்கை நீரே
எனதாசை நீரே
என் வாழ்வே இயேசய்யா
என் வாழ்வே நீர்தானய்யா