ennootu pesum en aayane – Ennodu Pesum En Aayanae

என்னோடு பேசும் என் ஆயனே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

என்னோடு பேசும் என் ஆயனே – Ennodu Pesum En Aayanae
என்னோடு பேசும்
என் ஆயனே
என் தாகம் தீர்க்கும்
அருஞ்சுனை நீரே
பெரும்பகை எனைச்சூழும் வேளையிலே
உன் தடியால் என்னை நீர் காக்கின்றீர்
வழி மாறிப்போகும் தனிமையிலே – 2
உன்குரலை கேட்க வழி செய்கின்றீர்
என் ஆயனே நீயே துணை
குறையொன்றுமில்லை
இனி என்றுமே
காயங்கள் தாங்காது நான் வீழும்போது
உன் தோள்மேல் வைத்து சுகம் தருகின்றீர்
தண்ணீரைக்காணா துயரினிலே (2)
உன் வார்த்தையே என் தாகம் தீர்க்கும்
என் ஆயனே நீயே துணை
குறையொன்றுமில்லை
இனி என்றுமே