Ennullame Endrendrumai

என்னுள்ளமே என்றென்றுமாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னுள்ளமே என்றென்றுமாய்
எந்நாளும் பாடியே போற்றுவாய்
சார்ந்து அவரை ஏகுவாய்
இயேசுவே உன் தஞ்சமே
உந்தனின் தேவனே என்றுமாய்
தாங்கியே காப்பவர்
தாயினும் அன்புடன்
தாங்கி ஏந்தி சுமப்பவர் – என்னுள்ளமே
உன்பேரில் கண்களை வைத்துமே
உந்தனை நடத்துவார்
ஆறுதல் அளிப்பவர்
என்றும் அவரை நம்பிடுவாய் – என்னுள்ளமே
உன் சத்தம் கேட்டதும் இயேசுவே
இரங்கியே பதில் செய்வார்
தேவனில் அமர்ந்திரு
நம்பும் நன்மை வந்தடையும் – என்னுள்ளமே