enoo theriyatha valikal

ஏனோ தெரியாத வலிகள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஏனோ தெரியாத வலிகள்
ஏனோ தெரியாத வேதனைகள்
இன்னும் ஏனோ தெரியாத துக்கம்
என்னை வாட்டி வதைக்கிறது – (2)
இயேசுவே நீரே என் ஆச்சரியமும் என் துர்க்கம்
இயேசுவே நீரே என் ஆறுதலும்
இயேசுவே நீரே என் கேடகமும் என் பலமும்
இயேசுவே நீரே என் நம்பிக்கை -(ஏனோ)
1).கருணை காட்டும் மனிதருக்காக – காத்துக் கொண்டிருந்தேன் நானும்
யாரையுமே காணவில்லை
ஆறுதல் சொல்லும் மனிதருக்காக – காத்துக் கொண்டிருந்தேன் நானும்
யாரையுமே காணவில்லை
உன் வேத வாக்கியம் என்னை காப்பாற்றியது
உன் பலமான வாக்கியம் என்னுள் நிற்கிறது (2) (இயேசுவே)
2).இரக்கம் காட்டும் மனிதருக்காக – காத்துக் கொண்டிருந்தேன் நானும்
யாரையுமே காணவில்லை
அன்பு காட்டும் மனிதருக்காக – காத்துக் கொண்டிருந்தேன் நானும்
யாரையுமே காணவில்லை
உன் வாசஸ்தலம் என்னை அணைத்துக் கொண்டது
சந்தோஷமாய் என்னுள் பொங்கி வழிகிறது (2) (ஏனோ)