enthan jeevan sonthamakath thaththam – Enthan Jeevan Sonthamaaga Thaththam

எந்தன் ஜீவன் சொந்தமாகத் தத்தம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் ஜீவன் சொந்தமாகத் தத்தம் – Enthan Jeevan Sonthamaaga Thaththam
1.எந்தன் ஜீவன் சொந்தமாகத் தத்தம் செய்கிறேன்,
ஜீவன் தந்த நாயகா.
2.எந்தன் வினாடி நாட்கள் யாவும் தத்தம் உமக்கே
உமை என்றும் போற்றவே.
3.எந்தன் வெள்ளி தங்கமெல்லாம் பாதம் படைக்கிறேன் –
எந்தன் சொந்தம் சூனியமே,
4.எனது புத்தி யுத்தியாதி மனது தத்துவம்-
யாவும் உமது பாத்தியம்.
5.எந்தன் சித்தம் உந்தனின் சித்தம் நித்தமுமதே.-
எந்தன் சொந்த நாதனே.
6.எந்த னிதயம் தந்தேனுமது ஆசனமாக-
என்றும் வந்து தங்கவே.
7.நீர் எப்பொழுதும் என்னை முழுவதும் சொந்தமாகவே –
ஏற்றுவீரே, நாயனே.