enthan kanmalaiye umakke sthooththiram

எந்தன் கன்மலையே உமக்கே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம்
எந்தன் இரட்சகரே உமக்கே ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால் வாழ்கிறேன் உமக்கே ஸ்தோத்திரம்
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
என் ஆத்துமா வாஞ்சிக்குதே
எந்தன் அடைக்கலம்
எந்தன் கோட்டையும்
எந்தன் தேவனும் நீரே
கன்மலை வெடிப்பில் என்னை மறைத்து
கருத்தாய் காப்பவரே
கண்ணுக்குள் இருக்கும் கண்மணி போல
கரிசனை உள்ளவரே
மரணமே உன் கூர் எங்கே
சாவே உன் ஜெயம் எங்கே
கிறிஸ்து என் ஜீவன்
சாவு என் ஆதாயம்
எதற்கும் பயமில்லையே
எந்தன் கன்மலையே உமக்கே பாடல் வரிகள், Enthan kanmalayae umakkae lyrics