enthan karunaiyin theva

எந்தன் கருணையின் தேவா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் கருணையின் தேவா
வரம் தரும் நாதா
கனம் எல்லாம் உமக்கல்லவா
என்னை ஒருபோதும் மறவா
மகிமையின் மன்னவா
மெய் தெய்வம் நீர் அல்லவா-2
உம்மை பாடிடுவேன்
உம்மை போற்றிடுவேன்
என்றும் ஆர்ப்பரிப்பேன்
உம்மில் மகிழ்ந்திடுவேன்-2
1.வானமே அழிந்துபோனாலும்
பூமியே ஒழிந்துபோனாலும்
உந்தன் வார்த்தையோ ஒருநாளும்
மாறவே மாறா என்றுமே நிலைத்திருக்கும்
ஜீவனுள்ள வார்த்தை உம் வார்த்தை
பரலோகத்திற்கு அது மட்டும் பாதை
தினம் தினம் உம்மையே போற்றுகிறேன்
உமக்குள் மட்டுமே வாழுகிறேன்-எந்தன்
2.எனது பிரியமும் நீரே
எனது ஆசையும் நீரே
குறைவான என் வாழ்வில்
நிறைவான பங்கு நீரே நீர்தானே
பாவமான என் வாழ்வில் தூய்மையாக்கும்
உம்மை போல நான் வாழ உதவி செய்யும்
தினம் தினம் உம்மையே போற்றுகிறேன்
உமக்குள் மட்டுமே வாழுகிறேன்-எந்தன்
எந்தன் கருணையின் தேவா பாடல் வரிகள், Endhan Karunayin Dheva Lyrics