enthan nirppantham parum – Enthan Nirpantham Paarum

எந்தன் நிர்ப்பந்தம் பாரும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் நிர்ப்பந்தம் பாரும் – Enthan Nirpantham Paarum
பல்லவி
எந்தன் நிர்ப்பந்தம் பாரும் என் மக்களே!
இரங்க மனதில்லையா?
அனுபல்லவி
இந்துமா சமுத்திரம் தொடங்கி
இமயமலை வரைக்கும் – ஐயோ?
சரணங்கள்
1.கண் மணிகளில் கணக்கற்ற பேர்கள்
கல்வியாதும் அறியார் – பலர்
விண்ணொளியற்று வீண் பக்தியினில்
விழுந்து கிடக்கின்றாரே, ஐயோ!
2.அருமையாய்ப் பெற்ற எந்தன் மக்கள்
அந்தகாரச் சிறையில்-சிக்கிச்
சிறுமையடைந்து தவித்து நிற்பதைச்
சிந்தையில் வைப்பார் இல்லையோ? ஐயோ!