Enthan Poomaanai Kaana

எந்தன் பூமானைக் காண

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் பூமானைக் காண
சிந்தை பெருகுதையோ என்றைக்கு காண்பேனோ ஓ… ஓ…
1. சுந்தரத்தில் மிகுந்து அந்தரங்கத்திருக்கும் எந்தன் பூமானைக்காண – அழகுடைய அண்ணல் இயேசுவைக் காண ஓ
2. விண்ணிலிருந்தவர் மண்ணின்மேல் வந்தவர் கன்னிகையிற் பிறந்தவர் லாசருக்காகக் கண்ணீரை விட்டழுதவர்
3. இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ சொன்ன வாக்கை நினைத்து – அடியேன் உந்தன் பாதம் பணிந்து வந்தேன் 0
4. பொல்லாதோரை இரட்சிக்க வல்ல பராபரன் என்ன துயரடைந்தார் – அதை நினைத்தால் சொல்ல முடிவதில்லை
5.பாதகரின் அடி கன்னத்தில் படும்வேளை என்னை நினைத்தீரே நீர் – அதை . நினைத்தால் உம்மை மறப்பேனோ நான்