1. enthan visuvasam

எந்தன் விசுவாசம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

1. எந்தன் விசுவாசம்
தேவாட்டுக் குட்டியே,
நோக்குதும்மை;
கேளும் என் விண்ணப்பம்
நீக்கும் என் குற்றத்தை
முற்றும் உம் சொந்தம் நான்
இன்று முதல்
2. தாரும் உம் கிருபை
சோர்ந்த என் நெஞ்சுக்கு
பெலன் ஈயும்
ஆ! எனக்காகவே
மரித்தீர் இயேசுவே
என் அன்பின் சுவாலையை
ஓங்கச் செய்யும்
3. திகைத்து நிற்கையில்
துக்கங்கள் சூழ்கையில்
வழி காட்டும்;
அந்தகாரம் நீக்கும்
கண்ணீர் துடைத்திடும்
உம்மில் நிலைத்திட
அருள் தாரும்
4. மரிக்கும் நேரத்தில்
கலக்கம் நேரிடில்
சகாயரே;
அன்புள்ள இரட்சகா
நீக்கும் என் பயத்தை,
சேர்த்திடும் மோட்சத்தில்
என் ஆத்துமாவை
எந்தன் விசுவாசம் பாடல் வரிகள், Enthan Visuwaasam Lyrics