enthan yesaiah um anbe

எந்தன் இயேசையா உம் அன்பென்றும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் இயேசையா (2)
உம் அன்பென்றும் பெரிதையா
என் வாழ்நாளெல்லாம் உம்
அன்பை நான் நினைத்து
எந்நாளும் போற்றிடுவேன்-2
குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
பாவங்கள் போக்கி அணைத்தீரையா -2
என்னுள்ளம் பொங்கும் உம்மை துதிக்கும்
உயிரின் ஜீவன் நீர்தானையா -2
2. உலகம் என்னை வெறுத்த போது
கரங்கள் நீட்டி அணைத்தீரையா
உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
என் வாழ்வில் என்றும் நீர்தானையா