enthan yesuvae ummai pola

எந்தன் இயேசுவே உம்மைப் போலவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் இயேசுவே உம்மைப் போலவே
என்னை மாற்றுமே என்னை மாற்றுமே
சர்வ வல்லவரே சர்வ சிருஷ்டிகரே
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
எந்தன் இயேசுவே உந்தன்
சமுகமே என் முன் செல்லுதே
எந்தன் இயேசுவே உந்தன்
கிருபையே இன்றும் வேண்டுமே
எந்தன் இயேசுவே உம் கண்மணி
போல் காத்துக் கொள்ளுமே
எந்தன் இயேசுவே உந்தன்
வார்த்தையால் என்னை தேற்றுமே
என் நேசரே என் மீட்பரே
என் தேவனும் நீரே
நான் நம்பிடும் என் கேடகம்
என் துருகம் நீரே