eppadi naan thuthipaen

எப்படி நான் துதிப்பேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எப்படி நான் துதிப்பேன் என்
இயேசுவே எப்படி துதிப்பேன்
உம்மை நான் எப்படி துதித்திடுவேன்
நீர் செய்த நன்மைகள்
ஆயிரம் ஆயிரமே எனக்கு
நீர் செய்த அற்புதங்கள் ஆயிரம் ஆயிரமே
1. ஆபத்தில் சேற்றினின்று தூக்கினீரே
பரிசுத்த இரத்தத்தால் கழுவினீரே-2
கன்மலையின் மேல் நிறுத்தினீரே(2)
துதிக்கும் புதுப்பாட்டை தந்தீரே
2.வியாதியின் வேதனைகள் நீக்கினீரே
இதயத்தின் காயங்கள் ஆற்றினீரே
தனிமையின் துயரத்தை தேற்றினீரே
ஆபத்து நேரத்தில் காத்தீரே
3. தேவைகள் யாவையும் கொடுத்தீரே
உயர்ந்த ஸ்தானத்தில் வைத்தீரே
உந்தன் பாதத்தில் பணிந்திடுவேன்
உமக்காக என்றும் வாழ்ந்திடுவேன்