erigo nagar

எரிகோ நகர் வீதிலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. எரிகோ நகர் வீதிலே
கள்ளர் கையில் அகப்பட்டேன்
குற்றுயிராய் காயப்படுத்தி
அனாதை போல் கிடந்தேன்
பெலனற்ற என்னை உதவிட
ஒருவரும் முன் வரவில்லை
அலங்கோலமாய் நான் கிடந்தாலும்
அலங்கரிக்க ஒருவர் வந்தார் – 2
காயங்கள் ஆற்றும் வைத்தியர்
கருத்தாய் விசாரிக்கும் சிநேகிதர்
குற்றங்கள் அனைத்தையும் மன்னித்து
மறக்கும் தயாளனவர்
2. வாழ்க்கையின் பாதையிலே
காயங்கள் நேரிடுமே
வேதனை துன்பங்கள் பெலவீனம்
ஏமாற்றம் தனிமை சுகவீனம்
கடந்ததை நடந்ததை நினைத்து
வருத்தத்தில் மூழ்வதில் லாபமில்லை
உதவி செய்வார் யாரும் இல்லை
என்று நீ கலங்கவேண்டாம் – 2
இயேசுவைப்போல் யாரும் இல்லையே
உன்னையும் என்னையும் நேசிக்க
தனிமையில் இருந்தாலும் தனிமையில்லை
இயேசு நம்மோடிருக்க – 2
இயேசுவை உயர்த்திடுவோம் – 4
இயேசுவுக்Nகு மகிமை – 4