Ethanai Thooram Varuveer Kapaatra

எத்தனை தூரம் வருவீர் காப்பாற்ற

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எத்தனை தூரம் வருவீர் காப்பாற்ற
எவ்வளவு மைல் நடப்பீர் கரைசேர்க்க
மறந்தாலும் உம்மை மறுதலித்தாலும்
உம்மை தேடாமல் உலகத்தை தேடி அலைந்தாலும்
நீர் நீரே ஆண்டவரே என்னை மன்னியும் ஆண்டவரே
பாவத்தை வெறுத்த நீர் பாவி என்ன வெறுக்கலையே
கோபித்தாலும் நீர் என் அப்பா என்று அறிவித்தீரே – 2
உம் சித்தம் செய்ய எனக்கு இன்னொரு வாய்ப்புத் தாரும்
உம் துணையோடு இந்த உலகத்தை ஜெயிக்கனுமே – 2
1. மந்தை விட்டே விலகிச் சென்றேன்
தேடி வந்து என்னைத் தோளில் சுமந்தீர் – 2
கோபத்தில் இருப்பீர் என்று பயந்து இருந்தேன் – 2
வறுத்தத்தோடு இருந்தீரே அணைத்து முத்தமிட்டீரே – நீர்
2.குழப்பங்களால் குழம்பி நின்றேன்
தெளிவின் ஆவியானவர் தேடி வந்தீர் – 2
பொய்யான காரியங்கள் என்னை இழுக்கப் பார்க்குதே -2
உண்மைக்கு உருவம் நீர் எனை இழுத்துக்கொள்ளுமே – நீர்
எத்தனை தூரம் வருவீர் காப்பாற்ற பாடல் வரிகள், Ethanai thooram varuveer kapaatra Lyrics