Ethir Kaalam Undu Lyrics

எதிர்காலம் உண்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யாக்கோபே நீ கலங்கிடாதே
சிறு கூட்டமே நீ பயப்படாதே -2
எதிர்காலம் உண்டு நிச்சயம் உண்டு
இஸ்ரவேலாய் நீ மாற்றப்படுவாய் -2
1.தலை கல்லின் அனுபவம் மாறிடும்
சிறையிருப்பின் அனுபவம் மாறிடும் -2
வானத்திற்கு ஏணி வைக்கபட்டதே
தூதர்கள் இறங்கிட கண்டுக்கொண்டேனே -2 -எதிர் காலம் உண்டு
2.பூமியின் தூளை போல் உன் சந்ததி
நாற் திசையும் செழிப்பாய் பரம்புமே -2
சொன்னதை செய்யும்வரை கைவிடமாட்டார்
வானத்தின் வாசலாய் மாற்றிடுவாரே-2 -எதிர் காலம் உண்டு
3.நீ போகும் இடமெல்லாம் காப்பாற்றி
ஆகாரமும் வஸ்திரமும் தருவாரே -2
சமாதானத்தோடே நடக்க பண்ணுவார்
இழந்ததை இரட்டிப்பாய் திரும்ப தருவார் -2 -எதிர் காலம் உண்டு