Etho enakku puriyavillai

ஏதோ எனக்கு புரியவில்லை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஏதோ எனக்கு புரியவில்லை
என் மேல் பாசம் குறையவில்லை
எத்தனையோ தூரம் எத்தனையோ பாரம்
என்றாலும் உம் பாசம் குறையவில்லை
ஈடில்லை இணையில்லை
இது போல் எவரும் செய்ததில்லை
எத்தனையோ தூரம் எத்தனையோ பாரம்
என்றாலும் உம் பாசம் குறையவில்லை
உலகத்தின் அன்பு மேலானதென்றேன்
நாட்களும் செல்ல செல்ல தடுமாறி நின்றேன்
உணர்வையும் தந்தீர் என் மேல் உரிமையும் கொண்டீர்
உறவையும் தந்தீரே அதையும் உண்மையாய் தந்தீரே
தனிமையும் இல்லை வெறுமையும் இல்லை
ஏசுவே உம் பாசம் குறையவுமில்லை- ஈடில்லை
பகைவர்கள் என் மேலே பலவந்தம் பண்ணினாலும்
பகை எண்ணம் எண்ணியே முதலாக நின்றாலும்
வேண்டாம் என்றீர் வாழ்வை அழிக்கும் என்றீர்
வேண்டும் என்றேரே பகைகள் மாற செய்தீரே
பகைகளும் இல்லை அழியவும் இல்லை
ஏசுவே உம் பாசம் குறையவுமில்லை- ஈடில்லை