etuththu varukiren kotuththu – Eduthu varukiren koduthu magilkintrean

எடுத்து வருகிறேன் கொடுத்து
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

எடுத்து வருகிறேன் கொடுத்து – Eduthu varukiren koduthu magilkintrean
பாடல் வரிகள் – காணிக்கை பாடல்
எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன்
ஏற்றிடு என் இறைவா
உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய்
மலர்ந்திட அருள் புரிவாய் – 2
1. உழைப்பின் கனி இது உமக்கெனத் தந்தேன்
ஏற்றிடு என் இறைவா – 2
உமக்குகந்த பலியில் பலிப்பொருளாய்
நிதம் தருவேன் ஏற்றிடுவாய் எனைத் தருவேன் ஏற்றிடுவாய்
தருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் – 2
2. ஏழை எளியோர் வறியோர் வாழ்ந்திட
ஏற்றிடு என் இறைவா – 2
துயர்துடைத்திடும் கரமாய் பணிவிடை புரிய
வருவேன் ஏற்றிடுவாய் எனைத் தருவேன் ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் – 2
3. உண்மையும் நீதியும் உலகினில் நிலைத்திட
ஏற்றிடு என் இறைவா – 2
தினம் மடிந்திடும் மனிதத்தில் விடியலைக்
கண்டிட வருவேன் ஏற்றிடுவாய் எனைத் தருவேன் ஏற்றிடுவாய்
வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் – 2