Evannamaaga Karthare Ummai Vanaguven

எவ்வண்ணமாக கர்த்தரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Gnanapaadalgal and Paamalaigal collection.

1.எவ்வண்ணமாக, கர்த்தரே,
உம்மை வணங்குவேன் ?
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென தருவேன் ?
2.அநேக காணிக்கைகளால்
உம் கோபம் மாறுமோ ?
நான் புண்ணிய கிரியை செய்வதால்
கடாட்சம் வைப்பிரோ ?
3.பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும் , பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே.
4.நான் குற்றவாளி , ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அளித்தால் நியாயமே .
5.ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்.
6.இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார் ;
உம் திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார் .
7.இவ்வண்ணமாக கர்த்தரே ,
உம்மை வணங்குவேன்
என் நீதி இயேசுகிறிஸ்துவே ,
அவரைப் பற்றினேன்
எவ்வண்ணமாக கர்த்தரே உம்மை பாடல் வரிகள், Evvannamaaga kartharae ummai lyrics